Home / சமையலறை / அயிரை மீன் குழம்பு

அயிரை மீன் குழம்பு

அயிரை மீன் நன்மைகள்:

அயிரை மீன் என்பது குளம்வாய்க்கால் மற்றும் சேறுகள் நிறைந்த சிறு ஆறுகள் போன்றவற்றில் வாழும் ஒரு மீன் ஆகும். இம்மீன்கள் உருவத்தில் மிகச்சிறிய அளவில் இருக்கின்றன.

உணவுக்குப் பயன்படுத்தும் போது பிற மீன்களைப் போல் இம்மீனின் எந்தப் பகுதியும் நீக்கப்படுவதில்லை.

இம்மீன் மருத்துவ குணமுடையதாக இருப்பதால் இதனை வாங்கி உண்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே இதன் விலையும் பிற ஆற்று மீன்களை விட அதிகமாக  உள்ளது.

அயிரை மீன்கள்  ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும்

தேவையான பொருட்கள்:

அயிரை மீன்                  –  கால் கிலோ
சின்ன  வெங்காயம்   -150 கிராம்
தக்காளி                           – 2
பூண்டு                              – 10 பல்
பச்சை மிளகாய்          -3
கருவேப்பிலை,கொத்தமல்லி இலை –  சிறிதளவு
நல்லெ  எண்ணெய்  – ‍4 ஸ்பூன்
கடுகு- தாளிக்க
மஞ்சள் தூள்                  – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள்‍            –  1 ஸ்பூன்
மல்லி  தூள்                    – ‍  2 ஸ்பூன்
உப்பு                                – தேவைக்கு.
புளி                                   – சிறிய எலுமிச்சை அளவு
அரைத்த  தேங்காய் – 5 ஸ்பூன்

செய்முறை:
அயிரை மீனை கல் உப்பு போட்டு  நன்றாக மூன்று நான்கு முறை தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். அயிரை  மீனில்   மண்  அதிகம்   இருக்கும்   அதனால் மண் போக   நன்கு கழுவ வேண்டும். பின்பு    ஒரு   கடா யில் எண்ணெய் விட்டு, கடுகு,  , கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் தாளித்து, வதங்கியவுடன், தக்காளி,சேர்க்க வேண்டும். தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த்தூள், மசாலாத்தூள் சேர்க்க வேண்டும். புளித்தண்ணீர் விட வேண்டும்.  அதனுடன் அரைத்த தேங்காய்   தேவையான அளவு   உப்பு    சேர்த்து   நன்கு   கொதிக்க  வைத்து   குழம்பு   ஒரளவுக்கு    கெட்டியானவுடன்  மீனை போட வேண்டும்,  பின்பு  5 நிமிடம் கழித்து  குழம்பை இறக்கி வைத்து அதில்    சிறிதளவு   கருவேப்பிலை,கொத்தமல்லி இலை போட்டு  மூடி வைக்கவும். சுவையான அயிரை மீன் குழம்பு ரெடி.

Check Also

நண்டு ரசம்

நண்டு ரசம்: தேவையானவை: நண்டு – 2 மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், எண்ணெய் – தலா 1 ஸ்பூன் தக்காளி …