Home / புதிய பார்வை / பிரமிப்பூட்டும் பிரமிடு மர்மங்கள்!

பிரமிப்பூட்டும் பிரமிடு மர்மங்கள்!

கி.மு 2700க்குப் பிறகு கட்டத் துவங்கிய எகிப்தியர்கள் கி.மு 1700 வரை பிரமிடுகளைக் கட்டினர்.

மூன்றாம் வம்ச காலத்தில் யோசர் மன்னர் காலத்தில் ஆறு மஸ்தபாக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி முதல் பிரமிடு ஒன்றை கட்டினர்.

எகிப்தின் பெரிய பிரமிடுகள் கிசா என்றவிடத்தில் உள்ளன. பெரும்பாலான பிரமிடுகள் நைல் ஆற்றின் மேற்குப் புறத்திலேயே கட்டப்பட்டன.

2008ஆம் ஆண்டுப்படி, இதுவரை 135 பிரமிடுகள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.

நிலவிலிருந்து பார்த்தால் தெரியக் கூடியது.

சீனப் பெருஞ்சுவரைப் போலவே நிலவிலிருந்து பார்த்தால் தெரியக் கூடியது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால் எந்தவித பாதிப்புகளும் அடையாமல், தொன்மை உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின் அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது பிரமிடு.

பிரமிடாலஜி:-
வியப்பூட்டும் பிரமிட் மர்மங்கள் எண்ணிலடங்காமல் போய் விட்டதாலும் அதன் பயன்கள் மிகப் பெரும் அளவில் இருப்பதாலும் பிரமிடாலஜி என்ற தனிப் பிரமிட் இயலே தோன்றி விட்டது. பிரமிட் என்சைக்ளோபீடியா என்னும் பிரமிட் பேரகராதியும் இப்போது வந்து விட்டது. அப்படி என்ன மர்மங்கள்? பயன்கள்?

நெப்போலியன்:-
மாவீரனான நெப்போலியன் உலக அதிசயங்களில் மிகவும் தொன்மையான கிரேட் பிரமிடின் முக்கிய உள்ளறையான மெயின் சாம்பரில் ஒரு இரவைக் கழித்தான். காலையில் வெளியே வந்த அவன் எல்லையற்ற பிரமிப்புக்குள்ளாகி இருந்தான். என்ன நடந்தது என்று கேட்ட போது அதைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் (you wont believe me if I telll you) என்றான்.

அமெரிக்க டாலர் மர்மம்:-
அமெரிக்க டாலரில் (ஒரு டாலர் நோட்டு) பிரமிட் படம் இருப்பது அதன் மர்ம ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே! அமெரிக்க டாலரின் இன்றைய செல்வாக்கிற்கு அதிலுள்ள பிரமிடே காரணம்! அதில் உள்ள பூர்த்தியாகாத பிரமிட் அமெரிக்கா எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

எகிப்தின் மிகப்பெரிய பிரமிடாகிய கிசா

கிசா பிரமிட்டு மொத்தம் 13 ஏக்கர் பரப்பில் பரந்துள்ளது.

23 லட்சம் கற்களால் அமைக்கப்பட்டது கிரேட் பிரமிட். அதன் ஒவ்வொரு கல்லின் எடையும் 2 டன் முதல் 30 டன் வரை இருக்கிறது.

இந்தக் கற்களால் 30 எம்பயர் ஸ்டேட் பில்டிங்குகள் கட்டலாம்
இந்தக் கற்கள் ஒரு மயிரிழை கூட இடைவெளி இன்றி இருப்பது அதிசயத்திலும் அதிசயமே! இந்தக் கற்களால் 30 எம்பயர் ஸ்டேட் பில்டிங்குகள் கட்டலாம்!

பிரிமிடின் மொத்தக் கற்களின் எடையான ஐம்பத்தி மூன்று லட்சம் டன்னை 1,000,000,000,000,000 (ten to the power of 15) என்ற எண்ணால் பெருக்கினால் பூமியின் எடை கிடைக்கிறது!
இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக்
கிடத்தி பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் கழுவுவார்கள்.

மம்மி படுத்துதல்

உடலின் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள். நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டு கல் உப்பில் பதப்படுத்தப்படும் இருதயம் அறிவின் இருப்பிடமாக எகிப்தியர்களால் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.

ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள். (உண்மையில் அறிவு என்பது மூளை தொடர்புடையது என்ற அறிவு அந்தக் காலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) உடல், கல் உப்பால் மூடப்படும்.

நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணெய்களைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும். அதன் பிறகு மரணக்கோவில் என்றழைக்கப்படும் லூசார் கோவிலின் பலிபீடத்தில் சில நாட்கள் வைப்பர்.

இது நேரடியாக சூரிய ஒளி படும் இடமாதலால் பாலைவன வெயிலின் வெப்பம் காரணமாக  உடலின் ஈரப்பதம் முழுமையாக ஆவியாகி இப்போது காய்ந்த உடல் மாத்திரம் இருக்கும்.

உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.
உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.
உடலை, பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.இறுதியில் பிரமிடுகளின் மய்யப்பகுதியில் அரச மரியாதையுடன் எடுத்துச்சென்று  அடக்கம் செய்யப்படும், அரசர் பயன் படுத்திய அனைத்துப் பொருள்களும் பிரமிடில்  வைக்கப்படும். இதில் தங்க வைர நகைகள் மற்றும் இதர விலையுயர்ந்த பொருட்களும் அடங்கும்

Check Also

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. …