Home / மற்றவை / கிருஷ்ணனின் கோஹினூர் வைரம் பற்றிய மர்மங்கள்

கிருஷ்ணனின் கோஹினூர் வைரம் பற்றிய மர்மங்கள்

இன்றைய ஆந்திராவில் இருக்கும் குண்டூர் பகுதி தான் கோஹினூரின் பிறப்பிடம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குண்டூரில் மாவட்டத்தில் இருக்கும் கொல்லூர் என்ற பகுதி தான் கோஹினூர் பிறந்த இடம். அது உலகின் பழமையான வைரம் உற்பத்தி செய்யும் இடமாகும்.  ஆதாரங்களின் அடிப்படையில், கோஹினூர் உண்மையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறிப்பட்டது அந்த வைரமானது காகத்தீய அரசர்களின் சொத்தானது.

வைரமனாது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில்,  பல்வேறு இந்து, முகலாயர், பெர்சியர், ஆப்கன், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது, மேலும் அவர்கள் இதை போர் நேரத்தில் கைப்பற்றி மீண்டும் மீண்டும் பாழ்படுத்தினர். இது இறுதியாக கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலமாக கைப்பற்றப்பட்டு, 1877 ஆம் ஆண்டில் மகாராணி விக்டேரியாவை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த போது பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் பகுதியானது.

கிருஷ்ணனின் வைரம்

இந்துப் புராணங்களின் அடிப்படையில், கிருஷ்ண பகவான் வைரத்தை ஜம்பவானிடமிருந்து பெற்றார், பின்னர் இவருடைய மகள் ஜம்பாதேவியை கிருஷ்ணர் மணந்தார். அந்த வைரத்தை சூரிய பகவானிடம் இருந்து சத்ரஜித்திற்கு (சத்தியபாமாவின் தந்தை) வந்தது, அது ஒரு நாளைக்கு 1000 கி.கி தங்கத்தை அளிக்கின்றது என்று புராணம் கூறுகின்றது. ஜம்பவான் கொன்ற சிங்கத்தால் கொல்லப்பட்ட சத்ரஜித்தின் சகோதரரிடமிருந்து வைரத்தைத் திருடியதாக கிருஷ்ணர் குற்றம் சாட்டப்பட்டார்.  சத்ரஜித் சந்தேகம் கொண்டு, “கழுத்தில் நகை அணிந்து காட்டுக்குச் சென்ற எனது சகோதரனை கிருஷ்ணன் கொன்றிருக்கலாம்” என்று கூறியிருந்தார். கிருஷ்ணர் தனது கௌரவத்தைக் காக்க, ஜாம்பவானுடன் கொடூரமாக சண்டையிட்டு, அவனிடமிருந்து வைரக்கல்லை பெற்று சத்ரஜித்திடம் திரும்ப அளித்தார். இப்போது சத்ரஜித் மிகுந்த அவமானம் கொண்டு, தனது மகள் சத்தியபாமாவின் கரங்களை அந்த வைரத்துடன் கிருஷ்ணனிடம் அளித்தார். கிருஷ்ணர் அவரது மகள் சத்தியபாமாவின் கரங்களை ஏற்றுக்கொண்டார்.

தொடரும் மர்மம்

கோஹினூர் வைரமானது ஒரு சாபத்தையும் கொண்டுவருவதாகவும், அதை ஒரு பெண் வைத்திருந்தால் மட்டுமே அது பலிக்காது என்றும் நம்பப்படுகின்றது. அதே போல, கோஹினூர் வைரத்தை கைப்பற்றிய மன்னர்கள் எல்லாம், போர்களில் தோல்வியுற்று அல்லது வேறு காரணங்களால் தங்களது மகுடத்தை இழந்துள்ளனர். அல்லது பிற துரதிஷ்டங்களில் பாதிக்கபட்டனர். பிரிட்டிஷார் விழிப்புடன் இந்த சாபத்திலிருந்து விலகி, ராணி விக்டோரியா அல்லது ராணி எலிசபெத் ஆகியோர் மட்டுமே ஆட்சியாளராக தனது ஆபரணமாக அந்த வைரத்தை அணிந்தனர். ராணி விக்டோரியாவிலிருந்து அந்த வைரமானது எப்போதும் மகுடத்திற்கான ஆண் வாரிசின் மனைவிக்குச் சென்றுவிடுகின்றது.

 

Check Also

மின்னலுக்கு பின் இடி இடிப்பது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

மழை பெய்யும் போது அதை ரசிப்பவர்களை விட இடி இடிக்கும் போது அதை கண்டு அஞ்சுபவர்களே அதிகம். ஆனால் அப்படி …