Home / புதிய பார்வை / வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

வெங்காயம் பயன்கள் ..! வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாசகுழாய் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியில் இருந்து விடுபட உதவுகிறது.

குளிர்கால ஜலதோசம் குணமாக: வெங்காயம் சளி, இருமல், காய்ச்சல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்றவற்றையும் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

வெங்காயத்தில் உள்ள ஆன்டி – மைக்ரோபியல் தன்மை சளி, காய்ச்சல், தும்மல், மூக்கு ஒழுகல், போன்ற நோய்களை சரி செய்து, அல்சர் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

வெங்காயத்தில் உள்ள கரையக் கூடிய நார்ச்சத்துக்கள், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

வெங்காயத்தில் உள்ள ஆன்டி – செப்டிக் மற்றும் ஆன்டி – மைக்ரோபியல் பண்புகள், காசநோயை ஏற்படுத்தும் மைகோ பாக்டீரியத்தை செயலிழக்கச் செய்து, காச நோய் வராமல் தடுக்கிறது.

பிரசவத்திற்கு பின் பெண்கள் வெங்காயத்தை சிறிது பச்சையாக தினமும் சாப்பிட்டால், அது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

வெங்காயத்தில் கலோரிகள், சோடியம் குறைவு மற்றும் கொழுப்புகள் அற்றது என்பதால்,

அது ரத்த நாளங்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, ரத்த சோகை, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.

இரத்த மூலம் குணமாக:
இரத்த மூலம் குணமாக 30 கிராம் வெங்காயத்தை (onions health benefits) தண்ணீரில் போட்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும். இந்த முறை தினமும் இரண்டு வேளை என்று பத்து அல்லது பதினைந்து நாட்கள் குடித்து வந்தால் இரத்த மூலநோயும் குணமாகும்.

பல்வலிக்கு:
பல்வலி உள்ளவர்கள் வெங்காயத்தை (onions health benefits) ஒரு துண்டு எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குணமாகும்.

பற்களை பாதுகாக்க:
பற்களில் பாக்டீரியாக்கள் தங்கிவிடாமல் இருக்க தினமும் ஒரு பச்சை வெங்காயத்தை (onions health benefits) சாப்பிட்டு வந்தால் பற்களில் பாக்டீரியாக்கள் தங்குவதை அழித்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்கிறது

புகை பிடிப்பவர்கள் குணம் பெற:
புகை பிடிப்பவர்கள் தினமும் அரை டீஸ்பூன் வெங்காயம் சாறு (benefits of onion juice) நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலம் பெறும்.

Check Also

படப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை

தமிழில் அறிமுகமாகி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஒருவர் மயங்கி விழுந்த …