Home / சினி கேலரி / ஆதித்யா வர்மா – திரைவிமர்சனம்

ஆதித்யா வர்மா – திரைவிமர்சனம்

2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்தான் ஆதித்யா வர்மா. இதில் சீயான் விக்ரம் மகன் துருவ், ப்ரியா ஆனந்த், பனிடா சந்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

தன் முதல் படத்திலேயே மொத்த கதைக்கும் வலு சேர்த்து நிற்கிறார் துருவ். இசையமைப்பாளர் ராதானின் இசை ‘ஆதித்ய வர்மா’விற்கு வலு சேர்க்கவில்லை, ரவி கே சந்திரன் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஷாலினி பாண்டேவின் இடத்தை பனிடா சந்துவால் நெருங்க முடியவில்லை.

மருத்துவ மாணவரான ஆதித்யாவுக்கு ஜூனியர் மாணவி மீது காதல். இவர்களுடைய காதலுக்கு சாதி குறுக்கே நிற்கிறது. இவர்களது காதல் தோல்வியில் முடிய, போதைக்கு அடிமையாகிறார் துருவ். அதனால் மருத்துவர் உரிமத்தை இழக்கிறார். ஒன்பது மாதங்கள் பிரிவுக்கு பிறகு தன் காதலி, மீராவை சந்திக்கிறார் துருவ். அதன் பிறகு மீண்டும் இவர்கள் வாழ்வில் இணைகிறார்களா என்பதுதான் மீதிக் கதை.

‘ஆதித்ய வர்மா’. வெற்றியின் விளிம்பில் அதற்கு துருவ் ஒருவரே போதும்.