Home / ஆன்மிகம் / ஒவ்வொரு கால பூஜைக்கும் ஒவ்வொரு நிறமாக மாறும் சிவன்

ஒவ்வொரு கால பூஜைக்கும் ஒவ்வொரு நிறமாக மாறும் சிவன்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு. ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம்.

மூலவர் : பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள்,

அம்மன்/தாயார் : காந்திமதியம்மை

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 68 வது தேவாரத்தலம் ஆகும்.

யானையை அடக்கிய கோழி

சோழ அரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதாகக் கருதி அவருக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான். பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது, யானையை கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார்.    

தோஷ நிவர்த்தி: பைரவர், சனிபகவான், சூரியன் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரக தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாகும்.

சைக்கிள் ஓட்டும் மனிதன்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட கோயிலில் சைக்கிளில் ஒருவர் அமர்ந்து இருக்கும் சிற்பம், காண்போரை வியக்க வைப்பவையாக அமைகின்றது. 

சைக்கிள் முதலில் 1890 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது என்ற நிலையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலில் அக்காலத்திலேயே சைக்கிள் பயன்படுத்தப்பட்டுள்ளது

Check Also

கண் திருஷ்டி நீங்க என்ன செய்ய வேண்டும்?

“கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. …