Home / ஆன்மிகம் / மகா சிவராத்திரி விரதம்

மகா சிவராத்திரி விரதம்

நாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம்.

இப்படிப்பட்ட மிக அருமையான மகா சிவராத்திரி தினம் இந்தாண்டு 21 பிப்ரவரி 2020ல் வெள்ளிக்கிழமை வருகிறது.

இந்த புண்ணிய நாளில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

நாம் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, ’ஓம் நமசிவாய’ எனும் நாமத்தை கூறி, சிவலிங்க பூஜை செய்ய வேண்டும்.

நித்திய பூஜை செய்பவர்கள் அதை அன்றைய தினம் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிடாமல் இருந்து இரவில் கண் விழிக்க வேண்டும்.

நாம் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், பழங்கள், அவல், தண்ணீர், பழச்சாறு அருந்தலாம்.

வீட்டில் பூஜை செய்வதோடு இரவில் கோயிலுக்கு சென்று அங்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.

மகா சிவராத்திரி தினத்தில் குறைந்தபட்சம் ஒரு வில்வ இலையாவது சிவனுக்கு நாம் அர்ச்சித்து வழிபடுவது அனைத்து நன்மைகளையும் தடக் கூடியது.

சிவனின் நாமத்தை சொல்லி வழிபட வேண்டியது அவசியம்.

Check Also

கண் திருஷ்டி நீங்க என்ன செய்ய வேண்டும்?

“கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. …