Saturday, July 4, 2020
Home செய்திகள் தமிழகம் பத்திரப்பதிவு சாட்சிகளுக்கு புது கட்டுப்பாடு

பத்திரப்பதிவு சாட்சிகளுக்கு புது கட்டுப்பாடு

சென்னை: சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்ய சாட்சியாக வருவோரின் புகைப்படம், கைரேகை பதிவு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்குவருகின்றன.

பத்திரப் பதிவில், விற்பவர், வாங்குபவர் மற்றும் அவர்கள் தரப்பில், தலா ஒருவர் சாட்சியாக கையெழுத்திடவேண்டும்.

விற்பவர், வாங்குபவர் தரப்பில் யாரும் வராத நிலையில், ஆவண எழுத்தர், வீடு, மனை விற்பனைதரகர்கள் சாட்சியாக கையெழுத்திடுவர்.

சார் – பதிவாளர் அலுவலகங்களில், சாட்சி கையெழுத்து போடுவதற்காகவே, பலர் வலம் வருகின்றனர்.

ஒரே நபர் பல பத்திரங்களில் சாட்சியாக வருவது மோசடிக்கு வழி வகுப்பதாக பதிவுத்துறை கண்டுபிடித்துள்ளது.

எனவே அரசு, சாட்சிகள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய, புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

கட்டுப்பாடுகள் விபரம்

சாட்சியாக வருவோரின் புகைப்படத்தையும், கைரேகை யையும் பதிவு செய்ய வேண்டும்.

சாட்சியாக வருவோரின் அடையாள ஆவணத்தையும், தெளிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

தொடர்ந்து ஆறு பத்திரங்களுக்கு மேல் ஒரே நபர் கையெழுத்திட, சார் – பதிவாளர் அனுமதிக்கக் கூடாது. தேவைப்பட்டால், மாவட்ட பதிவாளரிடம் அனுமதி பெற்ற பின் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும்.

- Advertisment -

Most Popular

“திருப்பதி கோவிலில் அர்ச்சகர்” உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா  பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் வரும் 12000 க்கு மேற்பட்ட...

இந்திய குற்றவியல் நடைமுறை? “சட்டம் தெளிவோம்”

முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு சட்டமும் நடைமுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது...

திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

விஜய் மாஸ்டர்ல ஹீரோ! நான் வில்லன்ல மாஸ்டர்! விஜய் சேதுபதி பேட்டி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம்  தற்போது ரிலீசுக்கு  காத்துக்கொண்டிருக்கிறது விஜய்க்கு எதிராக...