Home / பொழுதுபோக்கு / வெளியானது ரஜினியின் புதிய படத்தலைப்பின் பெயர்

வெளியானது ரஜினியின் புதிய படத்தலைப்பின் பெயர்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168 வது படத்தின் தலைப்பு அண்ணாத்த என அதிகாரப்பூர்வமாக றிவிக்கப்பட்டுள்ளது.

தர்பாருக்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை சிவா இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இது ரஜினியின் 168-வது படமாகும். 

குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் இதில் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு அண்ணாத்த உள்பட சில பெயர்கள் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு வந்தன.

இன்று (24-ம் தேதி) மாலையில் படத்தின் தலைப்பை அதிகாரபூர்வமாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. படத்திற்கு, அண்ணாத்த என பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பு வெளியானதும் ரஜினி ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள்.

Check Also

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன்

வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னனை பற்றி அறிவதற்கு முன் அதன் ஆரம்பத்தை தெரிந்து கொள்வோம். எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா (தன் …