Home / மற்றவை / 15,000 லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவினார் ராமர்பிள்ளை

15,000 லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவினார் ராமர்பிள்ளை


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ராமர் பிள்ளை தன்னுடைய மூலிகை பெட்ரோல் விற்பனையை கடந்த ஜன. 29 முதல் சென்னையில் துவங்கி உள்ளார்


தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட விற்பனை முகவர்கள் அறிமுக விழா ராஜபாளையத்தில் நடந்தது.

இதை தொடர்ந்து ராமர் பிள்ளை கூறியதாவது

பிப். 27 முதல் மூலிகை பெட்ரோல் நேரடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் ரூ. 20 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் இறுதிக்குள் ரூ. 20 விலையில் மூலிகை பெட்ரோல் தமிழகம் முழுவதும் கிடைக்கும்

கன்னியாகுமரி – நாகர்கோவில் இடையில் நாளொன்றுக்கு 15,000 லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் தொழிற்சாலை தயாராக உள்ளது.


கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாற்று எரிபொருளை தயாரிக்க எந்தவித தடையும் விதிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தற்போது செயல்படுத்தி வருகிறோம்.

மார்ச் இறுதிக்குள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 21 ஆண்டுகளாக இந்த முயற்சியில் போராடி வருகிறேன். விவசாய முறையில் மூலிகையை விளைவிக்கும் முயற்சி நடந்து வருகிறது. உலக காப்புரிமை பெறுவதற்கு முயற்சிகள் நடந்து வருவதாக ராமர்பிள்ளை தெரிவித்தார்.

Check Also

மின்னலுக்கு பின் இடி இடிப்பது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

மழை பெய்யும் போது அதை ரசிப்பவர்களை விட இடி இடிக்கும் போது அதை கண்டு அஞ்சுபவர்களே அதிகம். ஆனால் அப்படி …