Home / செய்திகள் / தமிழகம் / ஆபாச படங்கள் பகிர்வு: மாணவர்கள் 67%, 31% மாணவிகள்

ஆபாச படங்கள் பகிர்வு: மாணவர்கள் 67%, 31% மாணவிகள்

67% மாணவர்களும் 31% மாணவிகளும், ஆபாசப் படங்களை பகிர்ந்து கொள்வதாக, காவல் துறை முன்னாள் ஐஜி கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

காரைக்குடி அருகேயுள்ள அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில், 1992-1995 ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, 25 ஆண்டுகளுக்கு  பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காவல்துறை முன்னாள் ஐஜி கலியமூர்த்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நேரில் பேசுவதற்கு தயங்கும் விஷயத்தை, செல்போனில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.