Home / சினி கேலரி / ஜுராஸிக் பார்க்’ வரிசையின் கடைசிப் படப் பெயர் அறிவிப்பு

ஜுராஸிக் பார்க்’ வரிசையின் கடைசிப் படப் பெயர் அறிவிப்பு

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜுராஸிக் பார்க் படம் 1993-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் பெரிதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.  

ஜுராசிக் பார்க் வெற்றியைத் தொடர்ந்து டைனோசர்களை  மையமாக வைத்து ஐந்து படங்கள் வெளியாகி வணிகரீதியாக வெற்றி பெற்றன.

தற்போது, ஜுராசிக் வேர்ல்ட் 3 இயக்குனர் கொலின் ட்ரெவாரோ இயக்கத்தில், ஜுராஸிக் வேல்ட் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் தலைப்பு: ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

இது வரை மனிதனுக்கும், டைனோஸர்களுக்கும் நடக்கும் போராட்டம்தான் கதைக்களமாக இருந்தது.

ஆனால் ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் படத்தின் கதை வேறு எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

ஜுராஸிக் பார்க் பட வரிசையின் கடைசி படம் ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் ஜூன் 11, 2021 அன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.