Saturday, July 4, 2020
Home புதிய பார்வை யூ டியூப் பார்த்து வீட்டிலேயே சோப் தயாரித்து கண்பார்வை இழந்த இளைஞர்

யூ டியூப் பார்த்து வீட்டிலேயே சோப் தயாரித்து கண்பார்வை இழந்த இளைஞர்

இன்று சமூக வலைத்தலங்களில் மூன்று பொருள்களை வைத்து வீட்டிலேயே இயற்கை முறையில் குளியல் சோப் தயாரிக்கலாம் என்ற நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வலம் வருகிறது இதுபோன்ற ஒரு விடியோவை நம்பி எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் சோப் தயாரித்த கர்நாடகாவின் மங்களூரு பகுதியை சேர்ந்த ஷேஷான் ஷெட்டி என்ற இளைஞருக்கு கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அதிக அளவு காஸ்டிக் சோடா சேர்த்து செய்யப்பட்ட சோப் பயன்படுத்தியதால் பார்வை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வகையான சோப்புகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது

கண்ணாடிபௌலில் காஸ்டிக் சோடா தண்ணீர் சேர்த்து கலக்கப்படுகிறது. இந்த சோடாவை கலந்ததும் தண்ணீரின் நிறம் மாறி சூடாக மாறிவிடும். அதனால் தண்ணீர் குளிர்விக்கபடுகிறது. பின்பு காஸ்டிக் சோடா கலந்த நீர் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலக்கப்படுகிறது. நன்கு மிக்ஸ் செய்த பிறகு கலவை சோப் மோல்டில் ஊற்றி காய்ந்தவுடன் மோல்டிலிருந்து சோப் கட்டிகள் தனியாக எடுக்கப்படுகிறது. இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஹேண்ட் மேட் சோப் ரெடி வாசனைக்கு மஞ்சள் , ஜவ்வாது , கத்தாழை என கவர்ச்சி வார்த்தைகளுடன் வந்த வீடியோக்களை நம்பி தன் பார்வையை இழந்துள்ளார் கர்நாடக இளைஞர்.

காஸ்டிக் சோடா மனித உடலுக்கு மிகவும் ஆபத்தானது.  இது சருமத்திற்கு மட்டுமல்ல உட்புற உறுப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும். உடலில் அதன் ஊடுருவலின் முக்கிய பாதை வாய் வழியாகவே உள்ளது ஆனால் சுவாசக் குழாய் வழியாக உட்கொள்வது விலக்கப்படவில்லை. சோடியம் ஹைட்ராக்சைடு நீண்ட காலமாக வெளிப்படுவதால் உணவுக்குழாய் அழிவுக்கு உட்படுகிறது இது கடுமையான விஷத்தை ஏற்படுத்துகிறது.

பயன்பாட்டிற்கான வழிமுறைகள்

காஸ்டிக் சோடா ஒரு சக்திவாய்ந்த காரம் நீங்கள் அறிவுறுத்தல்களுடன் கண்டிப்பாக அதனுடன் பணியாற்ற வேண்டும்: கையுறைகளை அணியவேண்டும் இது தோல் தீக்காயங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்; காஸ்டிக் காஸ்டிக் புகைகளை சுவாசிப்பதைத் தவிர்க்க சுவாசக் கருவியை அணியவேண்டும்; நன்கு காற்றோட்டமான பகுதியில் வேலை செய்யவேண்டும்.

சோடியம்-பொட்டாசியம் ஹைட்ராக்சைடு அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ள சோப்புகள் தோலில் எரிச்சலை உண்டாக்கக்கூடியவை. கேஸ்டிக் சோடா என்ற பெயரில் அழுக்குகளை சுத்திரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி சோப்பு தயாரிக்கும்போது கைகளில், கண்களில் படாதபடி கவசங்கள் அணிந்தே செய்ய வேண்டும். மேற்கத்திய நாடுகளில் பலர் வீட்டிலேயேயும் தயாரிக்கிறார்கள். ஆனால், இது தொழிற்சாலைகளில் தயாரிக்க ஏற்றது.

இயற்கை சோப்பு என்று கையாள தெரியாத ரசாயனங்களை பயன்படுத்தி உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தி கொள்ளாமல் உங்களுக்கு ஏற்ற சோப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

இயற்கையை விரும்பினால் நாட்டு மருந்தகங்களில் கிடைக்கும் குளியல் பொடியை வாங்கி பயன்படுத்துங்கள். இது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை தரும்.

 

 

- Advertisment -

Most Popular

“திருப்பதி கோவிலில் அர்ச்சகர்” உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா  பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் வரும் 12000 க்கு மேற்பட்ட...

இந்திய குற்றவியல் நடைமுறை? “சட்டம் தெளிவோம்”

முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு சட்டமும் நடைமுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது...

திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

விஜய் மாஸ்டர்ல ஹீரோ! நான் வில்லன்ல மாஸ்டர்! விஜய் சேதுபதி பேட்டி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம்  தற்போது ரிலீசுக்கு  காத்துக்கொண்டிருக்கிறது விஜய்க்கு எதிராக...