Saturday, July 4, 2020
Home செய்திகள் கொரோனாவிலிருந்து மீண்ட 114 வயது முதியவர் !

கொரோனாவிலிருந்து மீண்ட 114 வயது முதியவர் !

கொரோனா வைரஸிலிருந்து 114 வயதுடைய எத்தியோப்பிய முதியவர் அபா முழுமையாக குணமடைந்துள்ளார், அபா மீண்டது அதிசயமானது என்று அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்

அபா துறவியாக பல ஆண்டுகளாக ஒரு எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்; அபா என்றால் தந்தை என பொருள்படும் எத்தியோப்பிய சொல்

தலைநகரான அடிஸ் அபாபாவில் அபா திலாஹுன் தாமாக முன்வந்து வைரஸுக்கு சோதனை செய்துகொண்டார் எனவும் மேலும் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவக் குழு தெரிவித்துள்ளது

யேகா கோடெப் மருத்துவமனையில் கடுமையான கொரோனா வைரஸ் வார்டில் அனுமதிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குள் நிலைமை மோசமடைந்தது மேலும் அவருக்கு செயற்கை ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.

மேலும் அவருக்கு ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்து டெக்ஸாமெதாசோன் வழங்கப்பட்டது இது கோவிட் -19 தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையாகும்

பின்னர் படிப்படியாக நோய் தாக்கத்திலிருந்து மீண்ட அவர் தற்பொழுது முழுமையாக குணமடைந்துள்ளார் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது

இதை பற்றி அவரது பேரன் கூறியதாவது தாத்தா நன்றாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கிறார் இருப்பினும் வைரஸின் பின் விளைவுகள் அவரது குரலை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு எத்தியோப்பியா ஏப்ரல் மாதத்தில் அவசரகால நிலையை அறிமுகப்படுத்தியது, பள்ளிகளையும் விளையாட்டு மைதானங்களையும் மூடியது, பெரிய கூட்டங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை தடை செய்தது, பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைத்தது. ஆனால் வணிகங்கள் திறந்த நிலையில் உள்ளன.

- Advertisment -

Most Popular

“திருப்பதி கோவிலில் அர்ச்சகர்” உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா  பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் வரும் 12000 க்கு மேற்பட்ட...

இந்திய குற்றவியல் நடைமுறை? “சட்டம் தெளிவோம்”

முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு சட்டமும் நடைமுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது...

திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

விஜய் மாஸ்டர்ல ஹீரோ! நான் வில்லன்ல மாஸ்டர்! விஜய் சேதுபதி பேட்டி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம்  தற்போது ரிலீசுக்கு  காத்துக்கொண்டிருக்கிறது விஜய்க்கு எதிராக...