Saturday, July 4, 2020
Home செய்திகள் தமிழகம் என் கணவர் பீட்டரை அழைத்து விசாரிக்க வேண்டும் - மனைவி போலீசில் புகார்

என் கணவர் பீட்டரை அழைத்து விசாரிக்க வேண்டும் – மனைவி போலீசில் புகார்

நடிகை வனிதா விஜயகுமார், படத்தயாரிப்பாளரான பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாலும் வனிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். எளிமையாக நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். ஏற்கெனவே ஆகாஷ், ஆனந்த் ஜெயராஜன் ஆகியோரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்திருந்தார். இந்த திருமணங்கள் முறிந்ததையடுத்து பாலை வனிதா திருமணம்செய்து கொண்டுள்ளார். பீட்டர் பாலும் திருமணமானவர்தான் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் பீட்டர் பால் தன்னை ஏமாற்றி விட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் புகாரில் பீட்டர் பாலிற்கு ஏற்கனவே என்னுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. குடும்ப பிரச்னை காரணமாக 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். முறையாக விவாகரத்து அளிக்காமல் பீட்டர் பால் வனிதாவை மணந்துகொண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

“திருப்பதி கோவிலில் அர்ச்சகர்” உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா  பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் வரும் 12000 க்கு மேற்பட்ட...

இந்திய குற்றவியல் நடைமுறை? “சட்டம் தெளிவோம்”

முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு சட்டமும் நடைமுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது...

திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

விஜய் மாஸ்டர்ல ஹீரோ! நான் வில்லன்ல மாஸ்டர்! விஜய் சேதுபதி பேட்டி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம்  தற்போது ரிலீசுக்கு  காத்துக்கொண்டிருக்கிறது விஜய்க்கு எதிராக...