Saturday, July 4, 2020
Home செய்திகள் தமிழகம் கொரோனா தொற்று - தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகள் பாதிப்பு! ஒன்றரை வயதுக் குழந்தை விழுப்புரத்தில்...

கொரோனா தொற்று – தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகள் பாதிப்பு! ஒன்றரை வயதுக் குழந்தை விழுப்புரத்தில் உயிரிழந்தது

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயதுக் குழந்தை விழுப்புரத்தில் உயிரிழந்தது.

நேற்று முன் தினம் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் இருமலுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதில் பதறிப்போன பெற்றோர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது. அன்றைய தினமே குழந்தைக்கு மாரடைப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அந்த குழந்தை கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், மூச்சுத் திணறலும் இருமலும் குறையாத நிலையில் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். ஆனால், அந்தச் சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காததால் மூச்சுத் திணறல் அதிகமாகி குழந்தை நேற்று இரவு உயிரிழந்துவிட்டதாக அறிவித்தது மருத்துவமனை நிர்வாகம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்திருப்பது விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றுமுன்தினம் வரை 12 வயதுக்கு உட்பட்ட 110 குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் கோவையில் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தையும் விழுப்புரம் மாவட்டத்தில் 1 வயது குழந்தையும் உள்ளது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 110 குழந்தைகளில் 59 ஆண் குழந்தையும், 51 பெண் குழந்தையும் உள்ளனர்.

- Advertisment -

Most Popular

“திருப்பதி கோவிலில் அர்ச்சகர்” உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா  பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் வரும் 12000 க்கு மேற்பட்ட...

இந்திய குற்றவியல் நடைமுறை? “சட்டம் தெளிவோம்”

முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு சட்டமும் நடைமுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது...

திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

விஜய் மாஸ்டர்ல ஹீரோ! நான் வில்லன்ல மாஸ்டர்! விஜய் சேதுபதி பேட்டி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம்  தற்போது ரிலீசுக்கு  காத்துக்கொண்டிருக்கிறது விஜய்க்கு எதிராக...