டிக் டாக், ஜூம், யுசி பிரவுசர் உள்ளிட்ட 55 சீன செயலிகளுக்கு தடை !

சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனபிரதமர் நரேந்திரமோடி எச்சரித்துள்ளார்.

Praveen

அதேநேரம் இந்தியாவுக்கு வெளியே தகவல்களை எடுத்துச் செல்லுவதாகவும் பாதுகாப்புக்கு கவலை அளிப்பதாகவும் உள்ள சீனா தொடர்புடைய 55 செயலிகளை முடக்குவதுடன் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாமென மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளன.

பிரபல பொழுது போக்கு செயலியான டிக்டாக், வீடியோ கான்பரன்சிங் செயலி, யூசி பிரவுசர், ஷேர் நெட், கிளீன் மாஸ்டர் உள்ளிட்ட சீன செயலிகளின் பட்டியலை மத்திய அரசுக்கு உளவுத்துறை அனுப்பி வைத்துள்ள தகவலின் அடிப்படையில் அனைத்து செயலிகளையும் மத்திய அரசு முடக்கியுள்ளது