கோவாக்சின், இந்தியாவின் முதல் கோவிட் -19 தடுப்பூசி மனித சோதனைக்கு அரசு அனுமதி!

ஹைதராபாத்தில் செயல்படும் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் கொரோனா வைரஸ் மருந்தை கண்டுபிடித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த மருத்துக்கு கோவாசின் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்பட்டு சோதனை செய்யப்படும் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து இது ஆகும்.

praveen

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ICMR, தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பாரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.

கோவாசின் (COVAXIN)ஐ உருவாக்காகி இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் இதற்கு முன் ரேபிஸ் , போலியோ, சிக்கன்குன்யா, ஜாப்பனீஸ் என்சிபிலிட்டிஸ், சிகா ஆகிய வைரஸ்களுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளது

கடந்த சில மாதங்களாக பாரத் பயோடெக் நிறுவனம் SARS-CoV-2ல் தீவிரமாக சோதனை செய்து SARS-CoV-2 வைரஸில் இருந்து இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது கடந்த இரண்டு மாதங்களாக அந்த நிறுவனத்தின் BSL-3 (Bio-Safety Level 3) ஆய்வு கூடத்தில் மிகுந்த பாதுகாப்பிற்கு இடையில் நடந்த தீவிரமான சோதனைகளில் (COVAXIN) நல்ல முடிவுகளை கொடுத்துள்ளது.

இதனால் இந்த மருத்துக்கு மனிதர்களின் மீது முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது இதன் சோதனைகள் ஜூலை மாதம் தொடங்கும் என்கிறார்கள்.