Saturday, July 4, 2020
Home செய்திகள் இந்தியா டிக்டாக் செயலியை நீக்கியது கூகுள்! டவுன்லோடு செய்த ஆப் நிலை என்ன ?

டிக்டாக் செயலியை நீக்கியது கூகுள்! டவுன்லோடு செய்த ஆப் நிலை என்ன ?

இந்தியாவுக்கு வெளியே தகவல்களை எடுத்துச் செல்லுவதாகவும் பாதுகாப்புக்கு கவலை அளிப்பதாகவும் உள்ள பிரபல பொழுது போக்கு செயலியான டிக்டாக், வீடியோ கான்பரன்சிங் செயலி, யூசி பிரவுசர், ஷேர் நெட், கிளீன் மாஸ்டர் உள்ளிட்ட சீனா தொடர்புடைய 55 செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது

டிக்டாக் செயலியை இந்தியாவில் கூகிள் அதன் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது

எப்போது முதல் பயன்படுத்த முடியாமல் போகும்? தற்போது டவுன்லோட் செய்து வைத்துள்ள ஆப் நிலை?

இந்நிலையில் இந்தியாவில் டிக் டாக் செயலியை சுமார் 13 கோடி பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவருகிறார்கள் என்கிறது மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சக புள்ளி விவரம்.

இந்நிலையில் தான் மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் நீக்கப்பட்டாலும் ஏற்கனவே டவுன்லோட் செய்து பயன்படுத்தி வரும் பயனர்கள் தொடர்ந்து அதைப் பயன்படுத்தி வீடியோக்களை பதிவேற்றம் உட்பட அனைத்து செயல்பாடுகளையும் செய்யமுடியும்.

ஆனால் ஒரு முறை அதை நீக்கிவிட்டால் மறுபடி டவுன்லோட் செய்யவோ பயன்படுத்தவோ முடியாது.

இந்நிலையில் டிக்டாக் இந்தியா நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் உத்தரவுக்கு டிக் டாக் நிறுவனம் கீழ்படியும். அதேநேரம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க அரசுடன் சந்திப்பு நடத்த வருமாறு மத்திய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

- Advertisment -

Most Popular

“திருப்பதி கோவிலில் அர்ச்சகர்” உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா  பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் வரும் 12000 க்கு மேற்பட்ட...

இந்திய குற்றவியல் நடைமுறை? “சட்டம் தெளிவோம்”

முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு சட்டமும் நடைமுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது...

திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

விஜய் மாஸ்டர்ல ஹீரோ! நான் வில்லன்ல மாஸ்டர்! விஜய் சேதுபதி பேட்டி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம்  தற்போது ரிலீசுக்கு  காத்துக்கொண்டிருக்கிறது விஜய்க்கு எதிராக...