நெய்வேலி என்எல்சியில் விபத்து : 5 ஊழியர்கள் உயிரிழப்பு; 17 பேர் காயம்

0
135

நெய்வேலி என்.எல்.சி. 2வது அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தார். 17 பேர் படுகாயமடைந்தனர்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. அனல் மின் நிலையத்தின் 7 அலகுகள் மூலம் ஆயிரத்து 470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அனல் மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் அவர்களை தேடி வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அனல் மின் நிலையத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.