வேலூரில் கொரோனாவுக்கு அதிகரிக்கும் உயிரிழப்பு

0
288

கொரோனா வைரஸ் தொற்றுக்கு வேலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்துவாச்சாரியை சேர்ந்த 73 வயது முதியவர், சங்கரன்பாளையத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஆகிய இருவர் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். 

இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1530 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் 410 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

நோய் தொற்று வேகமாக பரவினாலும் பொதுமக்கள் அச்சமின்றி முகக்கவசமின்றி சுற்றி வருகின்றனர்

வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வேலூர் மாவட்டத்தில் மக்கள் திருந்துவார்கள் போல் உள்ளது.