விஜய் மாஸ்டர்ல ஹீரோ! நான் வில்லன்ல மாஸ்டர்! விஜய் சேதுபதி பேட்டி

0
77

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம்  தற்போது ரிலீசுக்கு  காத்துக்கொண்டிருக்கிறது

விஜய்க்கு எதிராக விஜய் சேதுபதியின் மிரட்டலான வில்லத்தன நடிப்பை வெள்ளி திரையில் பார்க்க விஜய் சேதுபதி மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பிரச்சினை முடிந்தவுடன் தியேட்டரில் தமிழில் முதல் திரைப்படமாக ’மாஸ்டர்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த பேட்டியில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் தனது மிரட்டலான வில்லன் கேரக்டர் குறித்து ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தனது கேரக்டர் மாஸ்டர்’ திரைப்படத்தில் முழுக்க முழுக்க வில்லன் என்றும் படம் முடியும் வரை துளிகூட நல்லவன் இல்லை என்றும் கூறியுள்ளார்.

பேட்டியின் நடுவே விஜய் சேதுபதி “விஜய் மாஸ்டர்ல ஹீரோ நான் வில்லன்ல மாஸ்டர்” என தெரிவித்தார்

மேலும் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க தான் மிகவும் ஆவலுடன் இருந்ததாகவும் அந்த வாய்ப்பு இப்போதுதான் கிடைத்திருப்பதாகவும தெரிவித்துள்ளார்