திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

0
143

கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு பௌர்ணமி நாளான 04.07.2020 மற்றும் 05.07.2020 ஆகிய நாட்களில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மற்றும் பௌர்ணமி நாளன்று அண்ணாமலையார் மலையினை சுற்றி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.