“திருப்பதி கோவிலில் அர்ச்சகர்” உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

0
117

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா  பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் வரும் 12000 க்கு மேற்பட்ட பக்தர்களில் 100 பேருக்கு  மற்றும் கோவில் ஊழியர்களில் 100 பேருக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

தேவஸ்தானத்தில் பணி புரியும் ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அர்ச்சகர்கள் மேளம் வசிப்பவர்கள் விஜிலன்ஸ் ஊழியர்கள் என பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

எனவே முன்னெச்சரிக்கையாக ஒருமுறை திருமலைக்கு பணிக்கு வரும் ஊழியர்கள் அடுத்த 7 நாட்கள் வரை கீழே இறங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்

மேலும் சாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கடந்த 20 நாட்களில் எந்த ஒரு பக்தருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.