உதயகிரி கோட்டை டீ லெனோய் கோட்டை என்று அழைக்கப்பட்டது ஏன்?

உதயகிரி கோட்டை டச்சு Admiral டி லானாய் நினைவாக இக்கோட்டை ஒரு காலத்தில் தில்லானை கோட்டை அதாவது டீ லெனோய் கோட்டை என்று அழைக்கப்பட்டது.  அவரது மனைவி மற்றும் அவரது மகனின் கல்லறைகளும் இக்கோட்டையின் ஒரு பகுதியில் பாழடைந்த தேவாலயத்திற்குள் இன்னும் காணப்படுகின்றன.

டி லானாய் அடக்கம் செய்யப்பட்ட கல்லில் தமிழிலும் இலத்தின் மொழிகளிலும் கல்வெட்டுகள் உள்ளது.

அதேபோல் சமீபத்தில் தொல்லியல் துறை கோட்டைக்குள் உள்ள சுரங்க பாதையை கண்டுபிடித்தனர்,

தற்போது இந்த கோட்டையை தமிழ்நாடு வனத்துறையினரால் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது, அதேபோல தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் தலங்களாக உள்ளன.

தமிழ்நாடு உதயகிரி கோட்டையைப் போன்றே அதே பேர் கொண்ட ஆந்திர பிரதேசத்தில் உள்ள உதயகிரி கோட்டை 1434 ஆம் வருடம் முதல் 1512 ஆம் ஆண்டு வரை ஒடிசாவின் கஜபதிகளின் தலைவரான லாங்குலா கஜபதியால் கட்டப்பட்டுள்ள ஒரு கோட்டை உள்ளது.

Exit mobile version