தமிழில் எழுதப்பட்ட ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? எந்த கதையை ஒட்டியது?
இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் எனும் மூன்றினையும் காணலாம், பல நூல்கள் அரசனை அல்லது தெய்வங்களை பாட்டுட தலைவனாக கொண்டிருக்க சிலப்பதிகாரம் கண்ணகி. கோவலன் என்ற குடிமகனை பாட்டுட தலைவனாக கொண்டதால் இதனை “குடிமக்கள் காப்பியம்” என்றும் கூறுவர்.
இன்பமும், துன்பமும் கலந்து எழுதப்பட்ட நூலை இளங்கோவடிகள் ஏற்றினார், இவர் புகழ்பெற்ற சேர மன்னன் செங்குட்டுவனுடைய தம்பி என கருதப்படுகின்றது.
சிலப்பதிகாரம் என பெயர் வர காரணம் கண்ணகியின் சிலம்பு மற்றும் அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது,இளங்கோவடிகள் இளவரசு பட்டதை துறந்து துறவியாக வாழ்க்கையை மேற்கொண்டார், அண்ணன் செங்குட்டுவனின் மலைவளம் காணச் சென்றபோது கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலை சாத்தனார் புலவர் மூலம் அறிந்தார்.
இளங்கோவடிகள் கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நேர்மையும் அரசியலும் அவரை மிகவும் கவர சிலப்பதிகாரத்தை கவிப்பனைந்தார்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் அதனுடைய கதை கோவலன், கண்ணகி மற்றும் கோவலன் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விளக்குகிறது,சிலப்பதிகாரம் கிபி ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.