2011 மக்கள் தொகையின்படி நாமக்கல் மாவட்டத்தில் 17 லட்சத்தி 26 ஆயிரத்து 601 மக்கள் தொகை உள்ளது, இதில் ஆயிரம் ஆண்களுக்கு 986 பெண்கள் என்ற பாலின விகிதங்கள் உள்ளன.
மக்கள் தொகை அடிப்படையில் திருச்செங்கோடு மிகப் பெரிய நகரமாகும். நாமக்கல் மாவட்டம் புவியியல் ரீதியாக கொங்கு நாடு மண்டலத்துடன் இணைந்துள்ளது.
இந்த மாவட்டத்தின் பெரிய தொழில்- முட்டை உற்பத்தி மற்றும் லாரி பாடி பில்டிங் தொழில் ஆகியவற்றுக்கு பிரபலமானது, இதற்காக இந்த நகரத்தை பெரும்பாலும் முட்டை நகரம் என்றும் தென்னிந்தியாவின் போக்குவரத்து மையம் என்றும் குறிப்பிடப்படுகிறது.