முப்பத்தி எட்டு நிமிடங்களில் முடிந்த போர்?
வரலாற்றிலேயே மிகச் சிறிய போர் இந்தப் போர் Anglo- Zanzibar war வெறும் 38 நிமிடங்கள் நடந்த போர். இது அனைத்தும் 1890 வது வருடம் பிரிட்டிஷ் ஜெர்மனிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது போது தொடங்கியது.
அந்த ஒப்பந்தத்தில் Zanzibar மாநிலம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. மீதமுள்ள தன்சானியா நிலம் ஜெர்மனியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது..
சில வருடங்களுக்குப் பிறகு 1893-ஆம் வருடம் ஹமத் பின் துவா நீ Zanzibar மாநிலத்தின் சுல்தானாக இருந்தார்.
மூன்று வருட பொம்மை ஆட்சிக்குப் பிறகு 1896 வருடம் மர்மமான முறையில் இறந்தார் எப்படி இறந்தார் என்று பலரால் நம்பப்படுவது அவரது உறவினர் இவருக்கு விஷத்தை தந்து கொன்றார் என்று சொல்லப்படுகிறது ஆனால் இது பதிவு செய்யப்படவில்லை. அதன்பின் அவர் உறவினர் காலித் பின் பார்காஷ் Zanzibar மாநிலத்தை கைப்பற்றினார்.
அங்கிருந்து தான் அந்த வரலாற்றின் மிகச் சிறிய போர் தொடங்கியது எப்படி என்றால் ஆங்கிலேயரின் சட்டத்தின்படி புதிய அரச நியமனம் முன்பே அறிவிக்க வேண்டும் ஆனால் காலித் பின் பிரகாஷ் என்ன செய்தார் என்றால் ஆங்கிலேயருக்கும் முன்னறிவிப்பு இல்லாமல் ஆட்சியைக் கைப்பற்றினார். இதனால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள் பதவியை விட்டுக்கொடுக்க உத்தரவிட்டனர்.
ஆனால் பிடிவாதமாக இருந்த காலித் ஆங்கிலேயர்கள் முன்வைத்த எந்த எச்சரிக்கைகளையும் செவிசாய்க்கவில்லை , தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் எச்சரிக்கைகளும் விடுத்த பின்னரும் மறுத்ததால் ஆங்கிலேயர்கள் அரண்மனையை தாக்கினார் .
இதனை ஏற்கனவே கணித்த காலித் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாவலர்களுடன் அரண்மனையை பாதுகாத்தனர்.
சண்டை தொடங்கிய போது ஆங்கிலேயர்கள் பீரங்கிகளையும் குண்டுகளையும் வீசி சுமார் அரை மணி நேரம், முப்பத்தி எட்டு நிமிடங்களில் அரண்மனையை அரசு கொடியை கைப்பற்றினர்.
ஆனால் அந்த நேரத்தில் காலித் அரண்மனையை விட்டு ஒரு ரகசிய வழியில் வெளியே தப்பித்து சென்று தன்சானியா நிலத்தின் ஜெர்மனி கடற்பகுதியில் பாதுகாப்பில் இருந்தார் .பின்னர் ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டார். Zanzibar மாநிலம் பிரிட்டிஷ் பொம்மை ஆதரவாளரான ஹாமத் பின் முஹம்மத் கொடுத்து சுமார் அறை சகாப்தம் வரை ஆட்சி செய்தனர்.