சீன தற்காப்பு கலைக்கு பதிலடி கொடுக்க எல்லையில் ‘கட்டக்’ வீரர்கள்! – கட்டாக் பிரிவை பற்றிய சிறப்பு கட்டுரை

இந்தியா-சீனா  கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்டு எல்லையிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது. லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.

Praveen Praveen

கடந்த 1996ம் ஆண்டு சீனா – இந்தியா இடையே ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு வீரர்களும் எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது. இந்த சூழ்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு முன்பாக தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற வீரர்களை எல்லைப் பகுதிக்கு சீனா அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. 

சீன ராணுவம் தனது படையினருக்கு தற்காப்பு கலை பயிற்சிகளை வழங்குவதற்காக MMA என்று அழைக்கப்படும் கலப்பு தற்காப்பு கலை பயிற்சி வழங்க பல பயிற்சியாளர்களை வரவழைத்துள்ளது.

சீன ஊடகங்களின்படி, 20 தற்காப்பு கலை பயிற்சியாளர்களை (China Martial Arts) திபெத்துக்கு சீனா அனுப்புகிறது.

சீன தற்காப்பு கலைக்கு பதிலடி கொடுக்க எல்லையில் ‘கட்டக்’ வீரர்கள்!

இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய கட்டக் வீரர்களை களமிறக்கியுள்ளது. கட்டக் வீரர்கள் ஆயுதங்கள் இல்லாமல் போரிடுவதில் அதிதிறமையுடவர்கள், இந்திய ராணுவத்தில் ஒவ்வொரு பிரிவிலும் கட்டக் என்கிர சிறப்பு படைப்பிரிவினர் உள்ளனர்.

ஒரு யூனிட்டில் 40-45 கட்டக் வீரர்கள் இருப்பர், இவர்களில் அதிகாரி மற்றும் ஒரு ஜே.சி.ஒ அதிகாரி ஆகியோரும் இருப்பர்.

தரைப்படை வீரர்களுடன் ஒப்பிடும்போது, ஆயுதம் வைத்துக் கொண்டும் மற்றும் நிராயுதபாணியான போரிலும் சண்டையிடுவதில் தன்னிகரற்றவர்கள்.

 

அவர்களுக்கான சில உபகரணங்கள் இந்திய ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலைகளால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன

கட்டக் வீரர்கள் கல்வான் மோதலின் போது நடத்திய பதிலடி தாக்குதலில் சீன ராணுவம் நிலை குலைந்து போனது குறிப்பிடத்தக்கது.

கடினமான பயிற்சி

கட்டக் வீரர்கள் பெல்காமில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளியில் 43 நாட்களுக்கு பயற்றுவிக்கப்படுகின்றனர். அங்கு 35கிலோ எடையுடன் 40கிமீ இடைநில்லாமல் ஒடுதல் உட்பட பல கடினமான பயிற்சிகள் உண்டு.

கைகளால் எதிரிகளை சில நிமிடங்களில் கொல்லும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்

கட்டாக் பிரிவின் சிறப்புகள்

4 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு 2017 ம் ஆண்டு பூஞ்ச் பகுதியில் எல்லை கடந்து பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதலை நடத்தியது கட்டக் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தான்

யூரி ராணுவத் தளத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. 6 பீகார் மற்றும் 10 டோக்ரா படை பிரிவைச் சேர்ந்த கட்டக் வீரர்கள் தான்