லாக்டவுன் துவக்கத்திலிருந்து பிரபலங்கள் எல்லாம் வீட்டிலிருந்து போட்டோ ஷூட் செய்து இணையதளத்தில் படங்களாக வெளியிட்டு வருகிறார்கள் அந்த வரிசையில் பகல் நிலவு சீரியலில் மூலம் பிரபலமான நடிகை ஷிவானியும் இணைந்துள்ளார்
ஷிவானி வெளியிடும் புகைப்படங்களை பார்த்து மாடர்ன் உடையில் இவர் இவ்வளவு அழகா! ஏன் இதை இவ்வளவு நாட்கள் மறைத்துவைத்திருந்தார் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதற்கேற்றாற்போல் ஷிவானியும் 2016ல் நான் எப்படி இருந்தேன்? இப்போ எப்படி இருக்கேன்? என்பதை கேள்வியாய் கேட்டு அத்தனை பேரையும் உசுப்பேத்தி வருகிறார்.
பதினாறு வயதில் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் ஆரம்பத்தில் ஒரு மாடலாக தான் அறிமுகமானார். சிறுவயதிலேயே இவ்வளவு நடிப்பு திறமையா என்று ரசிகர்கள் வியந்து பேசும் அளவிற்கு அவருடைய நடிப்பு அழகாக இருந்தது. அதுபோக மாடலிங் பிராண்டட் விளம்பரங்கள் அழகுப் போட்டிகள் மற்றும் பேஷன் ஷோக்களில் கலக்கிவிட்டு பின்னர் சரவணன் மீனாட்சி 3 வது சீசனில் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்தார்.
சீரியல்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்த ஷிவானி தற்போது முன்னணி நடிகைகளும் வெட்கப்படும் அளவிற்கு கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் அவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சூடேறி போய் தவிக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.