கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!

  கொரோனா ஊரடங்கால் சினிமா சூட்டிங் இல்லாத காரணத்தினால் நடிகர் நடிகைகள் வீட்டிலேயே போட்டோ ஷூட் செய்து இணையதளத்தில் படங்களாக வெளியிட்டு வருகிறார்கள் அந்த வரிசையில் ஐஸ்வர்யா மேனனும் இணையத்தில் கலக்கி வருகிறார்.

  Praveen Praveen

  தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முதல் படத்திலே டிமான்ட் எகிறிய இளம் நடிகைகளும் அதிகம், வாய்ப்பு இல்லாமல் ஓடியவர்களும் அதிகம் சிலர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் வேறுவிதமாக ரசிகர்களை கவர்ந்து இழுப்பது எப்படி என்று ரூம் போட்டு யோசித்து களமிறங்குவார்கள்.

  அதுபோலவே நம்ம ஐஸ்வர்யா மேனனும் இணையதளத்தில் கவர்ச்சி சூறாவளியாக கொடிகட்டி பறக்கிறார். வாட்டசாட்டமாக அத்தனையும் அளந்து வைத்தார் போல இருக்கும் அம்மணியின் உடல் வாகு அவருக்கு கூடுதல் ப்ளஸ் பாய்ன்ட்.

  ஆப்பிள் பெண்ணே திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானா இவர் அதற்கு பிறகு தீயா வேலை செய்யனும் குமாரு, தமிழ் படம் 2, நான் சிரித்தாள் போன்ற அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும் அவர் பிரபலமாகவில்லை.

  தனது திரைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்காததால் கவர்ச்சி எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெறி ஏற்றி வருகிறார்.

  இந்நிலையில் இன்ஸ்டாவில் சமீபத்தில் ஐஸ்வர்யா மேனன் பதிவேற்றிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் நெற்றியில் கருப்பாக அணிந்திருந்ததை என்ன என்று விளக்கம் கேட்டதை பார்த்து, இந்த அளவிற்கு ரசிகர்கள் தன்னை ரசித்து பார்ப்பதை அறிந்து வியந்துபோனதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் சுற்றிவருகிறது.