குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கப்படுகின்றன!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காந்தி நகரில் அமைந்துள்ளஅரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

Praveen

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி 1964ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று முன்னணி கல்லூரிகளுள் ஒன்றாக திகழ்கிறது. இங்கு 3500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

தற்போது இங்கு இந்த ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையில் ஆன்லைன் மூலமாக 2600 பேர் விண்ணப்பித்த நிலையில் தற்போது இன்றிலிருந்து மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து  விண்ணப்பங்களை வழங்கி வருகிறது கல்லூரி நிர்வாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கல்லூரியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.