2020 ஐபிஎல் அட்டவணை மற்றும் எங்கெல்லாம் இலவசமாக பார்க்கலாம் முழு தகவல்கள் உள்ளே!

 

Praveen

2020 ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால், 2020 ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் பிசிசிஐ நடத்துகிறது.

ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தலா இரண்டு முறை மற்ற ஐபிஎல் அணியுடன் லீக் சுற்றில் மோத உள்ளன.முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் அபுதாபியில் மோதுகின்றன. இந்தத் தொடரில் மொத்தம் 56 லீக் போட்டிகள் உள்ளன. மேலும் ப்ளே ஆஃப் போட்டிகளும் மற்றும் இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

எட்டு ஐபிஎல் அணிகளும் கடந்த ஒரு மாதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகின்றன. மேலும் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் போட்டியின் இறுதி வரை பயோ குமிழியில் விளையாட வேண்டும். கொரோனா நோய்த்தொற்றின் அபாயத்தை வெகுவாகக் குறைப்பதற்காக, கிரிக்கெட் அணிகளை வெளி உலகத்திலிருந்து தனிமைப்படுத்துவதே இந்த பயோ குமிழியின் நோக்கம். இதன் விளைவாக, கிரிக்கெட் போட்டியாளர்கள் தொடர் முழுவதும் மைதானத்திற்கும் மற்றும் ஹோட்டல்களுக்கும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்து நாட்களிலும் போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்கும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மட்டும் போட்டி மாலை 3.30 மணிக்கும் நடைபெறும். நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள இறுதி லீக் சுற்றின் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

2020 ஐபிஎல் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தமிழ் வர்ணனையுடன் கண்டு மகிழலாம்.
மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழு சேனல்களான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி முதலியவற்றிலும் இலவசமாக பார்க்கலாம். போனில் பார்க்க – டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலி மூலம் தொலைபேசியிலும் அல்லது ஹாட்ஸ்டார் இணையதளம் மூலம் ஐபிஎல் தொடரை பார்த்து மகிழலாம். ஆனால், ஹாட்ஸ்டார் செயலி மூலம் கண்டு மகிழ சந்தா செலுத்த வேண்டும். விஐபி திட்டத்தில் ஆண்டு சந்தா ரூ.399 அல்லது ப்ரீமியம் திட்டத்தில் ஆண்டு சந்தா ரூ.1499 செலுத்த வேண்டும்.