10,906 காவலர் பணியிடங்கள் தமிழக போலீஸ் பொதுத் தேர்வு 2020 அறிவிப்பு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) ஆனது இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பணியிடங்களை நிறப்புவதற்காக அதிகாரப்பூர்வ பொதுத் தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

Praveen

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படைஆண், பெண் மற்றும் திருநங்கை), இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படைஆண்) இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் (ஆண்பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020-க்கு விண்ணப்பதாரர்களிடம் இருந்து இணைய வழி விண்ணப்பங்கள் (Online application) வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இக்குழும www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏனைய இதர வழிகளான விண்ணப்பப் படிவம் மற்றும் தட்டச்சுப் படிவம் மூலமாக விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தேர்வுக்கான முழு விவரம்: 

இத்தேர்விக்குரிய முழு விவரங்கள் அடங்கிய தகவல் சிற்றேட்டினை இக்குழும www.tnusrbonline.org இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பத்தினை நிறப்புவதற்கு முன்னர், இக்குழும இணையதளத்திலுள்ள தகவல் சிற்றேடு மற்றும் விண்ணப்பம் எப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்ற அறிவுரையினையும் பதிவிறக்கம் செய்து அவற்றிலுள்ள முழு விவரங்களையும் படித்த பின்னரே இணைய வழி விண்ணப்பித்தனை சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) ஆனது இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்ப்பாளர் பதவிக்கு 10,906 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இது தவிர பெண்களுக்கான  72 பின்னடைவு காலிப்பணியிடங்களையும் (ஆயுதப்படை – 62 மற்றும் சிறைத்துறை) அறிவித்துள்ளது.

ஊதிய விகிதம்:

இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர்ரூ.18,200 முதல் ரூ.52,900 ஆகும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர் என்று கூறியுள்ளனர்.

மேலும், விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும். இல்லையெனில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ்த் தேர்வில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

வயது : 

விண்ணப்பதாரர் 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பும் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறைகள்:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற் கூறு அளத்தல், உடல் தகுதித் தேர்வு, உடற்திறன் போட்டிகள் மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம் ரூ.130/- ஆகும். இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 26.10.2020 மற்றும் தேர்வு நாள் 13.12.2020.

மேலும், முழுமையான உடற்திறன் போட்டிகளுக்குரிய தகுதி விவரங்கள் இக்குழும www.tnusrbonline.org இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள தகவல் சிற்றேட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.