யார் இந்தடீன்
ஜோன்ஸ்??

ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் திடீரென மும்பையில் மரணம் அடைந்தார். எவ்வித உடல்நலப் பிரச்னையும் இல்லாமல், ஐபிஎல் வர்ணனைப் பணிகளுக்காக இந்தியா வந்திருந்த அவர் மாரடைப்பில் மரணம் அடைந்தார்.

Praveen

யார் இந்த Dean Jones???

1986 செப்டம்பர் 18 – MA Chidambaram Stadium , Chennai. ரொம்ப மோசமான formல இருந்த Dean Jones தன்ன நிரூபிக்க வேண்டிய அவசியத்துல ஆடுன innings. மெட்ராஸ் வெயில் உச்சி மண்டைல அடிக்கும் போது, பல தடவ வாந்தி எடுத்து , urinate பண்ணி கிட்டத்தட்ட செத்துப் போன levelல ஆடுன innings.

Tea break எடுக்கும் போது #DeanJones 202 ரன்ல not outல இருப்பாரு. Steve waugh சொல்லிருப்பாரு groundல இருந்து dressing room வரும் போது பொணம் மாதிரி தான் வந்தாரு jonesனு. சட்டை phant எல்லாத்தயும் கழட்டிட்டு ice bath கொடுத்தாங்க. Captain Allan Border கிட்ட போய் என்னால முடில retired hurt ஆவுறேன்னு சொன்னதுக்கு ‘என்னமாது பண்ணி out ஆகிட்டு வா’னு border சொன்னதும் 210 ரன்னுல out ஆவாரு Dean Jones. Out ஆகிட்டு dressing room போனதும் hospital போய் drips போட்டானுக jonesகு.

பின்னாடி இது குறித்து jones பேசும் போது “எனக்கு நாறு century அடிச்ச மாதிரி இருந்துச்சு…ஒரு ball face பண்ணதும் mid wicket போய் வாந்தி எடுத்துட்டு வருவேன்…phantsலயே urine போயிட்டு இருந்தேன்…out ஆனதும் hospital போய் check பண்ணும் போது தான் தெரிஞ்சது அன்னிக்கு மட்டும் 7 kilo எடைய இழந்துருக்கேன்னு…appolo hospitalல emergency ward போனோம்…அங்க என்ன விட ஒருத்தர் மோசமான நிலைல உயிருக்கு போராடினு இருந்தாரு…ஆனா நான் cricketerனு தெரிஞ்சதும் அவர விட்டுட்டு என்ன பாக்க வந்துடடாங்க”.

Without any doubt, this 210 is the best innings in sub continent by a visiting batsman ???

Rip Dean Johns.

எழுத்தாளர் : இல.வெங்கடேசன்