செங்குத்தான மலையை ஏறிய 68 வயதான பாட்டி

செங்குத்தான மலையை ஏறிய வயதான பாட்டி,

Praveen

எனது பெயர் ஆஷா ஆம்ப்தேவ் எனது வயது 68 மகாராஷ்ராவில் இருக்கிறேன். எனது மகன்களில் ஒருவர் ஹரியர் (Harihar)  செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டார். கோட்டை மிகவும் செங்குத்தாக இருப்பதை புகைப்படங்களில் பார்த்துள்ளதாக கூறினேன். ஆனால் என்னால் இதை கண்டிப்பாக செய்ய முடியும் என்று எனது மகன் கூறினான். ஆனால் அன்று இரவு வரை என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இருப்பினும் இறுதியில் கோட்டைக்கு கிளம்பி விட்டோம். நான் வயதானவள் என்பதால் என்னை மலையேற வேண்டாம், என்று அங்குள்ள சில சுற்றுலா பயணிகள் என் குடுபத்தினரிடம் கூறினர். ஆனால் என் மகனோ என்னால் செய்ய முடியும் என்று மீண்டும் உறுதியுடன் கூறினான். ஒரு கட்டத்தில் மிகவும் செங்குத்தான பாதையை ஒன்றை காட்டிய என் மகன் அம்மா அங்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றான், மிகவும் குறுகிய செங்குத்தான பாதையில் ஒரே நேரத்தில் ஒரு நபர் மட்டுமே செல்ல முடியும். ஏறுவதை எளிதாக்க இரண்டு கை , இரண்டு கால்களை ஊன்றி உறுதியான பிடியை ஏற்படுத்தி கொள்ள என் மகன் அறிவுறுத்தினான். நான் அதை விரைவில் கற்று கொண்டேன். கோட்டையின் உச்சியை என்னால் அடைய முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் நான் அதை செய்த போது என்னை ஊக்குவித்ததற்காக அனைவருக்கும் நன்றி கூறினேன்.

நான் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். நானும் என் மகன்களும் அவர்களுடைய குழந்தைகளும் என மூன்று தலைமுறையினரும் ஒன்றாக மலை ஏறும்போது என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வரும் டிசம்பர் மாதம் பாஸ்கர்கள் அல்லது மஹாராட்ராவின் மிக உயரமான சிகரமான கல்சுபாய்க்கு (Kalsubai) செல்ல நான் விரும்புகிறேன்.