வேலூர் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது ?

வேலூர் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள்,அரசு உதவி பெரும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து தொழிற்கல்வி பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க புதன்கிழமை (அக்டோபர் 14) வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Praveen

பல்வேறு தொழிற்பிரிவுகளில் இருபாலருக்கும் ஓராண்டு, ஈராண்டு பயிற்சிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. 14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. இந்த தொழிற்பிரிவுகளில் சேர 8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுஇருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 50 மட்டும்

இணைய வங்கி சேவை மூலம் செலுத்த வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் 2 ஆவது இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்த விவரங்களுக்கான கடைசி தேதிக்குப் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். பயிற்சிக் கட்டணம் இல்லை. பயிற்சியில் சேருவோர் அனைவருக்கும் மாதம் ரூபாய் 500 உதவித்தொகை, மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகங்கள், சீருடைகள், இலவசப் பேருந்துப் பயண அட்டை ஆகிய சலுகைகள் அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு வேலூர் ஐடிஐ 0416-2290848, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வழிகாட்டி மையம் 0416-2290042, மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம் 9499055675 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என வேலூர் அரசுத் தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.