சென்னை அணியில் (Chennai Super kings)-அதிகம் கவனிக்க வைத்த ஒரு வீரர் நாராயண் ஜெகதீசன்,யார் இவர்?

ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமாக தோல்வி அடைந்ததன் மூலம் பிளேஆப் (Play-off)  செல்லும் வாய்ப்பை வேகவேகமாக இழந்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

Praveen

ஆனால் இந்த போட்டியில் அதிகம் கவனிக்க வைத்த ஒரு வீரர் நாராயண் ஜெகதீசன் சென்னை அணியில் தொடர்ந்து சொதப்பி வந்த கேதர் ஜாதவுக்கு பதிலாக இந்த போட்டியில் அணிக்குள் சேர்க்க பட்டிருக்கிறார் ஜெகதீசன் யார் இந்த தமிழக வீரர் அவரது பின்னணி என்ன என்பதை தான் பார்க்க போகிறோம். ஜெகதீசன் கோயம்பத்தூரை சேர்ந்தவர்.TNPL மூலம் தான் இவர் மெல்ல மெல்ல பிரபலம் அடைந்தார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த TNPL  தொடரில் ரவிச்சந்தரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி கோப்பையை வென்றது அதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஜெகதீசன் பிளேஆப் (Play-off) சுற்றில் மதுரை panthers அணிக்கு எதிராக திண்டுக்கல் ட்ரகன்ஸ் அணி விளையாடியது. அந்த போட்டியில் 51 பந்துகளை சந்தித்த 87 ரன்களை குவித்தார்.

ஜெகதீசன் இதில் பணிரெண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடக்கம் இந்த ஒரு போட்டியில் மட்டுமல்ல அந்த சீசனில் திண்டுக்கல் அணிக்கு பல போட்டிகளில் வெற்றிக்கு உதவியுள்ளார். கடைசியாக நடைபெற்ற அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் அவர் முதலிடத்தில் இருந்தார். பத்து இன்னிங்ஸ்களில் 448 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரது ஸ்ட்ரைக்கட் 134 அதற்கு முந்தயதாக நடந்த அதிக ரன்கள் அடித்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

முன்னதாக 2016 ஆம் ஆண்டு IPL சீசனிலும் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் இவர்தான் முதலிடம்   என்பது  குறிப்பிடத்தக்கது. ஜெகதீசன் ஒரு விக்கட் கீப்பர், பேட்ஸ் மேன் அவருக்கு வயது 24, கடந்த 2016 ஆம் ஆண்டு ரஞ்சிக்கோப்பையில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி மத்தியபிரதேச அணிக்கு எதிராக விளையாடிய போதுதான் முதன் முதலாக ஜெகதீசனுக்கு ரஞ்சிக்கோப்பையில் இடம் கிடைத்தது . அந்த போட்டியில் தமிழ்நாடு முதலில் பேட்டிங் செய்தது. ஐந்து விக்கட்டுகள் விழுந்த பிறகு ஏழாவது பேட்ஸ்மேனாக தான் களத்துக்குள் சென்றார்.

ஜெகதீசன் அந்த முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார் அந்த போட்டியில் தமிழ்நாடு முதல் இன்னிங்ஸ்னில் 555 ரன்கள் அடித்து இருந்தது அதில் இரண்டு சிஸ்சர்களும் அடக்கம் அந்த இரண்டு சிஸ்சர்களுமே ஜெகதீசன் அடித்ததுதான் 204 பந்துகளை சந்தித்து எட்டு பௌண்டரி இரண்டு சிஸ்சர்கள் உட்பட 123 ரன்கள் எடுத்திருந்தார். அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவரே வென்றார். 1995 ஆம் ஆண்டு பிறந்த இந்த வலது கை விக்கட் கீப்பர் பேட்ஸ்மேனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆம் ஆண்டு இருபது லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தனர். அதன் பின்னர் இப்போது தான் அணியில் இடம்பிடுத்தார். பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஜெகதீசன் சாகர்ப்பந்தில் ஒரு அபாரமான ஸ்விப்விச் ஆடி ஒரு பௌண்டரி எடுத்தார். இன்றைய போட்டியில் சென்னை அணி சேஸிங்கில் தடுமாறி வந்த நிலையில் அந்த அணிக்கு நம்பிக்கை தரும் விதமாக ஜெகதீசன் விளையாடினர். ஆனால் இருபத்தியெட்டு பந்துகளில் நான்கு பௌண்டரி உடன் முப்பத்திமூன்று ரன்கள் எடுத்து அவுட் ஆனார்,

அவரது தந்தை சி. ஜெ. நாராயனும் ஒரு கிரிக்கெட் வீரர் தான் ஆம் மும்பை பிரஸ்டவிஷனில் டாடா எலெக்ரிக் நிறுவனத்துக்காக விளையாடியிருக்கிறார். ஜெகதீசன் முதலில் வேகப்பந்து வீச்சராகத்தான் விரும்பினாராம். ஆனால் அவரது தந்தை மற்றும் பயிற்சியாளர் அறிவுறுத்தலின் பெயரில் விக்கெட் கீப்பராக செயல்பட துவங்கியிருகிறார். கோவையில் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காமஸ் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் ஜெகதீசன். இந்து(Hindu) ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் ஆடம்வில்க்ரிஸ் மற்றும் மகேந்திர சிங் டோனியை விக்கெட்கீப்பர் பேட்மேன்களாக பிடிக்கும் என கூறியிருக்கிறார். அதே சமயம் விராட்கோலி தனக்கு மிகவும் பிடித்த பேட்மேன்கள் என்றும் அவர் பந்து வீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்தும் விதம் பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார். கிரிக்கெட்டில் ஆரம்ப கட்டத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் தான் இன்னும் சாதிக்க வேண்டியது அதிகம் என்பதை உணர்த்தியிருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருக்கிறார்.