எட்டாம் வகுப்பு படித்தவருக்கு தொழில் தொடங்க கடனுதவி

எட்டாம் வகுப்பு படித்தவருக்கு தொழில் தொடங்க கடனுதவி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

Praveen Praveen

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையை தெரிவித்துள்ளதாவது தமிழக அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தபட்டு வருகிறது.

உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூபாய் பத்து லச்சம் வரை, சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூபாய் ஐந்து லச்சம் வரை, வியாபாரம் சேர்ந்தவர்களுக்கு ரூபாய் ஐந்து லச்சம் வரை, வங்கி கடனுதவி வழங்கப்படும் இத்திட்டத்தில் பயன்பட எட்டாம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

பொதுப்பிரிவு ஆண்கள் பதினெட்டு வயது முதல் முப்பத்திஐந்து வயது வரையிலும் எஸ்சி, எஸ்ட்டி, பீசி, எம்பிசி, பதினெட்டு வயது முதல் நாற்பத்திஐந்து வரை உட்பட்டவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஐந்து லச்சத்திற்கு உயரக்கூடாது.

இத்திட்டத்தில் காண https://msmeonline.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தின் இரு நகல்கள் மற்றும் உரிய இணைப்புகளை

Address:

பொது மேலாளர் ,மாவட்ட தொழில் மையம்,

கலெக்டர் அலுவல வளாகம்,

சிவகங்கை.

என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய +91 04575240257 என்ற தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளலாம்.