பத்து ரூபாய்க்கு பிரியாணி

விருதுநகர் மாவட்டம் அருப்பு கோட்டையில் பத்து ரூபாய்க்கு விற்பனையாகும் சிக்கன் பிரியாணியை வாங்க கொரோனவை மறந்து ஆயிரக்கணக்கானோர் முந்தியடித்தனர்.

Praveen Praveen

திருச்சுழி சாலையில் புதியதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பத்து ரூபாய் நாணயம் கொண்டு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கபடும் என கடை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து பத்து ரூபாய் நாணயத்துடன் அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. பிரியாணிக்காக தனிநபர் சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூடிய மக்களை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து  கூட்டத்தை விரட்டியடித்தனர். தற்காலிகமாக சிக்கன் பிரியாணி கடை நிறுத்திவைக்கப்பட்டது.