இன்று முதல் பெரிய வெங்காயம் விலை 80 ரூபாய்?

சென்னையில் பெரிய வெங்காயம் விலை கிலோ 40 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்ந்துவிட்டது கோயம்பேடு சந்தைக்கு மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு 50 முதல் 60 லாரிகளில் ஆயிரத்து 250 டன் பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டது.

Praveen

கடந்த சில தினங்களாக வரத்து பாதியாக குறைந்தது 20 முதல் 30 லாரிகளில் 600 முதல் 700 டன் மட்டும் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது இதனால் பெரிய வெங்காயம் விலை அதிகரித்து 75 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது இதேபோல் வரத்து குறைவு போன்ற காரணத்தால் சின்ன வெங்காயம் விலையும் 50 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்ந்துள்ளது இதேபோல கேரட் முட்டைக்கோஸ் உருளை பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விலையும் 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது