பொங்கல் பண்டிகைக்கு ‘சுல்தான்’ படம் வெளியீடு

கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘சுல்தான்’ படத்தின் முதல்பார்வை வெளியாக உள்ளது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்துடன் எடுக்கப்படும் இந்த படத்தை ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

Praveen

கடந்த ஆண்டு தொடங்கிய ‘சுல்தான்’ படத்தை ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் வெளியிட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா காலத்தால் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது சூட்டிங்கை முடித்து ‘சுல்தான்’ படக்குழுவினர் இறுதிக்கட்ட வேலைகளில் மும்முரமாக உள்ளனர்.

மேலும் பொங்கல் பண்டிகைக்கு ‘சுல்தான்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் கார்த்தியுடன், ராஷ்மிகா மந்தனா  நடிக்கின்றனர்.