18.5 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது

IPL தொடரில் முக்கியமான போட்டி ஒன்றில் பஞ்சாப் அணி கொல்கத்தாவை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது. ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ராணா, திரிபாதி மற்றும் தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டுகளை நிறைவாக இருந்தது.

Praveen

நிதானமாக விளையாடிய சுப்மன் கில் மற்றும் கேப்டன் மார்கன் சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர். அரைசதம் கடந்த 57 ரன்களையும், மார்கன் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை சேர்த்தது எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி சிறப்பான தொடக்கம் பெற்றது.

தொடக்க வீரர் ராகுல் 28 ரன்களில், பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க வீரரான மந்தீப் சிக்கும் அதிரடி மன்னன் விஸ்டீலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரைசதம் கடந்தனர். 29 பந்துகளை சந்தித்த கெய்ல் 5 சிக்ஸர்களை உட்பட 51 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 18.5 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது. நேர்த்தியாக விளையாடிய மந்தீப் சிக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்களை சேர்த்தார். நடப்பு சீசனில் தொடர்ச்சியாக பெற்ற இந்த ஐந்தாவது வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியது.