தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா

மைசூருக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம், முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தசரா விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Praveen

விழாவின் சிகர நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம் நள்ளிரவு 12 மணிக்கு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய முத்தாரம்மன் ஆணவமே உருவான மகிஷாசுரனை வதம் செய்தாள்.

யானை, சிங்கம், சேவல் என அடுத்தடுத்து உருமாறி போர்புரிந்த மகிஷாசூரனை வதம் செய்த அம்பாளுக்கு சாந்தாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று காப்பு கழடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வழக்கமாக துளசி கடற்கரையில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களின் மத்தியில் விண்ணை முட்டும் அளவிற்கு பக்தி முழக்கங்களுடன் நடத்தப்படும் சூரசம்கார நிகழ்ச்சி கொரோனா காரணமாக கோயில் பிரகாரத்தில் பக்தர்கள் இன்றி நடந்து முடிந்தது.