நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Praveen

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது அவற்றில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக தியேட்டர்களில் 50 சதவீதம் வரை இருக்கைகளுடன் அனுமதி, பொதுக்கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடு ஆகியவை நீடிக்கும். முககவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுவது, ஆறடி சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் ஆலோசிக்காமல் கட்டுப்படுத்தல் பகுதிகளுக்கு வெளியே மாநில அரசுகள் தன்னிச்சையாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வினை நோய்கள் உள்ளவர்கள், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.