திருப்பதியின் ஆன்லைன் சேவைகளுக்கு பக்தர்களிடம் வரவேற்பு

திருப்பதி வெங்கடாசலபதியின் ஆன்லைன் சேவைகளுக்கு பக்தர்களிடம் வரவேற்பு காணப்படுவதால் மேலும், பல ஆன்லைன் செய்திகளையும், அதில் இணைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

Praveen Praveen

கொரோனா ஊரடங்கு காலத்தில் இணையதளம் மூலம் ஸ்வாமிகள் கண்குளிரக் கண்டு வழிபட முடிவதால், திருப்பதிகோவில் ஆன்லைன் வழிபாட்டு செய்திகளுக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. வரலட்சுமி விரத குங்கும அர்ச்சனை, கல்யாண உற்சவ சேவை ஆகியவற்றின், ஆன்லைன் சேவைகளை ஏராளமானவர்கள் கண்டு தரிசித்தனர்.

இதனால் ஆர்ஜித பிரம்மோற்சவம், தோல் உற்சவம், சகஸ்ர தீப அலங்காரம் உள்ளிட்ட சேவைகளையும் பக்தர்கள் ஆன்லைனில் காணும் விதமாக நவம்பர் மாதம் முதல் நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.