சூரரைப் போற்று; இளைஞர்களின் அமோக வரவேற்பு!!

அசாதாரண கனவுகளுடன் வாய்ப்புகளுக்காக ஏங்கிக்கொண்டிருந்த சாதாரண இளைஞனின் வாழ்க்கை பயணம்..

Praveen Praveen

பொட்டல் காட்டில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து அந்த ஊர் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக கடிதங்கள் எழுதும் தந்தைக்கும் போராட்டங்கள் மட்டுமே தீர்வு தரும் என்ற அந்த இளைஞனின் எண்ணம், தந்தை மகன் உறவை உடைக்கிறது..
பின் பாதுகாப்பு துறையில்(NDA) சேர்ந்து விமானப்படை அதிகாரியாகிறான். அவன் தன் தந்தை இறப்புக்கு ஊருக்கு வர பணம் இல்லாமல் விமான நிலையத்தில் பணத்திற்காக ஏங்கும் காட்சி கண்கலங்க வைக்கிறது.

பணக்காரர்கள் மட்டுமே பயணிக்கும் விமானத்தில் கடைசி சாமானிய மனிதனையும் அழைத்து செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல நூறு விமான நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்புகள் கேட்டும் கதவடைக்கப்படுகிறது.பின் நிலங்கள் விற்றும் மனைவியின் பணத்தைக் கொண்டும் விமானத்திற்கு முதலீடு போட்டு துரோகத்தால் வீழ்ந்து மீண்டும் விடாமுயற்சிகளால் தனது நண்பர்களுடன் சேர்ந்து சொந்தமாக விமானம் இயக்கத் தொடங்குகிறான்..

இந்த காட்சிகளுக்கிடையே முன்னாள் குடியரசு தலைவர் திரு. APJ அப்துல் கலாம் அவர்கள் வருவது போன்ற காட்சிகள் படத்திற்கு மேலும் வலுச்சேர்க்கின்றது..
மொத்தத்தில் அதிகார மற்றும் பணக்கார வர்க்கத்தினரால் திறமையுள்ள நடுத்தர ஏழை இளைஞனுக்கு மறுக்கப்படும் வாய்ப்புகளும் துரோகங்களையும் தாண்டி தன் கனவை மெய்த்துக்காட்டிய நாயகன்..
இந்த திரைப்படத்திற்கு சூர்யாவை தவிர வேறு எந்த நடிகரும் தன் உழைப்பை காட்டியிருக்கமாட்டார்கள்,அந்த அளவுக்கு அவரின் அசாத்திய நடிப்பும் உழைப்பும் காண்போரை கவர்ந்திழுத்தது.பெண் இயக்குநர் என்ற பாரபட்சமில்லாமல் அடுத்த கட்டத்திற்கு அதிரடியாக இயக்கியுள்ளார் சுதா கொங்கரா..

மொத்தத்தில் தோல்விகளாலும்,வாய்ப்புகள் மறுக்கப்பட்டதன் காரணமாக முடங்கியுள்ள இளைஞர்களுக்கு சூரரைப்போற்று திரைப்படத்தின் தாக்கம் அவர்களின் மனத்தில் ஒரு தன்னம்பிக்கையை பிறக்க வைக்கும்!!!

நீண்ட நாட்கள் கழித்து ஒரு முழு மன நிறைவான திரைப்படத்தை கண்டுள்ளதாக மக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்..