தமிழக வீரரான வருண் சக்ரவர்த்திக்கு நடிகர் விஜய் விருந்து

இந்திய ஐபிஎல் தொடரில் அதிகப்படியான ரசிகர்களால் ஈர்க்கப்பட்டவர் வருண் சக்கரவர்த்தி.

Praveen

தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி கொல்கத்தா அணிக்காக விளையாடி 13 போட்டிகளில் 17 விக்கெட்களை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக டோனியின் விக்கெட்டை அவர் போல்டாக்கிய விதம் இன்னும் ரசிகர்கள் கண்களில் நிற்கிறது.

தனது மாயாஜால சுழற்பந்து வீச்சினால் முன்னணி வீரர்களையும் திக்குமுக்காட வைத்த வருண் சக்கரவர்த்தி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கண்ணில் பட்டு இந்திய அணியில் இடம் பிடித்தார். கிரிக்கெட் மீது எவ்வளவு ஆர்வம் உள்ளதோ அதே போல நடிகர் விஜய் மீதும் அதே ஆர்வமுடன் இருந்துள்ளார் வருண். ஒரு பத்திரிகை பேட்டியில் அதை தெரிவித்துள்ளார். இதை அறிந்த நடிகர் விஜய் அவரை அழைத்து சிறிய விருந்து வழங்கி அவருடைய ஆசையையும் தீர்த்து வைத்தார்