பிரதமர் நிவாரணம் எனக்கூறி மோசடி:

பிரதமர் கொரோனா நிவாரணமாக ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கும் ரு. 4,500 தருவதாகக் கூறி உங்களது வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் தற்போது நடைபெற்று வருகிறது.

Praveen

இந்தக் கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக்காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தற்போது கொரோனா நிவாரணமாக பிரதமர் அனைவர்க்கும் ரு 4,500 நிதி வழங்கி வருகிறார். உங்களது வங்கியின் விவரங்களைக் கூறுங்கள் எனக்கேட்டு டெபிட் கார்டு விவரங்கள் வரை அனைத்தையும் வாங்குகின்றனர். இதுபோன்று தொடர் அழைப்புகள் தமிழகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.

பலர் இதுகுறித்து சைபர் கிரைம் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுபோன்று ஏராளமான நபர்கள் தொடர்ந்து பேசுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரி பேசுவதால் அனைவரும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.எனவே இது போன்று யாரெனும் அழைத்தால் அவர்களை நம்ப வேண்டாம், அவர்களிடமிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.