பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.
தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா (29). இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து வந்தார்.

Praveen Praveen

கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் நிச்சியதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் அவர்களின் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையை அடுத்த நாசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது இந்தத் திடீர் முடிவு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர் தனக்கு நிச்சயமான ஹேம்நாத் என்பவருடன் நாசரத்பேட்டை ஹோட்டல் அறையில் தங்கிஇருந்த போது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இவரது தந்தை காவல் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.